என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இன்னோவா க்ரிஸ்டா
நீங்கள் தேடியது "இன்னோவா க்ரிஸ்டா"
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்.பி.வி. ரக வாகனங்களின் விற்பனையில் டொயோட்டாவின் இன்னோவா க்ரிஸ்டா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. #Toyota #Car
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்.பி.வி. ரக வாகனமாக இருக்கிறது. டிசம்பர் 2018இல் மட்டும் இன்னோவா க்ரிஸ்டா காரை வாங்க சுமார் 11,200 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் டொயோட்டா நிறுவனம் சுமார் ரூ.2200 கோடிக்கும் அதிகளவு வியாபாரம் செய்திருக்கிறது.
இந்தியாவில் எம்.பி.வி. வாகனங்களுக்கான சந்தை அதிகளவு போட்டி ஏற்பட்டுள்ளது. புதுவரவு வாகனங்களான மஹிந்திரா மராசோ, மாருதி எர்டிகா போன்ற வாகனங்கள் அதிகளவு வரவேற்பு பெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் ரெனால்ட் என்.பி.சி. உள்ளிட்ட வாகனங்கள் சந்தையில் அதிகளவு போட்டியை ஏற்படுத்தியிருக்கின்றன.
விற்பனையை பொருத்த வரை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு டிசம்பரில் இருமடங்கு அதிகளவு இன்னோவா க்ரிஸ்டா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த விற்பனையை பொருத்த வரை இன்னோவா க்ரிஸ்டா கார் சுமார் 80,000 அதிக யூனிட்களை கடந்துள்ளது.
இன்னோவா க்ரிஸ்டா கார் இருவித டீசல் என்ஜின்கள்: 2.4 லிட்டர் (5-ஸ்பீடு மேனுவல்) மற்றும் 2.8 லிட்டர் (6-ஸ்பீடு ஆட்டோமேடிக்) ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் 150 பி.ஹெச்.பி. பவர், 343 என்.எம். டார்க் மற்றும் 174 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 360 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
2016 ஆண்டில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் ரூ.13.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.20.78 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன வாகன விற்பனை டிசம்பர் 2018 இல் மட்டும் சுமார் 10% அதிகரித்துள்ளது. #toyota
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை டிசம்பர் மாதத்தில் மட்டும் 10% வரை அதிகரித்துள்ளது. 2018 டிசம்பர் மாதத்தில் மட்டும் டொயோட்டா நிறுவனம் 11,830 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
இதுதவிர 653 யூனிட்கள் எடியோஸ் சீரிஸ் கார்களை டொயோட்டா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் டொயோட்டா மொத்தம் 12,483 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
டிசம்பர் 2017 ஆம் ஆண்டு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மொத்தம் 10,793 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. இத்துடன் 812 எடியோஸ் சீரிஸ் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.
2016 ஆம் ஆண்டு டொயோட்டா அறிமுகம் செய்த இன்னோவா க்ரிஸ்டா கார் கணிசமான விற்பனையை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. இந்திய சந்தையில் இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.
இதுகுறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன இணை நிர்வாக இயக்குனர் என். ராஜா கூறும் போது,
"ஆண்டு இறுதியில் அதிகளவு விற்பனையை பதிவு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஐ.எம்.வி. ரக கார்களில் அதிகளவு விற்பனையை டொயோட்டா பதிவு செய்திருக்கிறது. டொயோட்டா வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி."
என்று கூறினார்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் ஃபார்ச்சூனர் எஸ்.யு.வி. மற்றும் இன்னோவா க்ரிஸ்டா மாடல்களில் புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. #Toyota
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா மாடல்களில் புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. பல்வேறு வேரியன்ட்களில் கிடைக்கும் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் எமர்ஜென்சி பிரேக் சிக்னல், பின்புறம் ஃபாக் லேம்ப்கள், முன்பக்கம் எல்இடி ஃபாக் லேம்ப்கள், ஆன்டி-தெஃப்ட் அலாரம், கிளாஸ் பிரேக் மற்றும் அல்ட்ராசோனிக் சென்சார் போன்றவை வழங்கப்படுகிறது. புதிய அம்சங்களுடன் கார்களின் விலையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விலை ரூ.30,000 வரை, இன்னோவா க்ரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் விலை ரூ.44,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய அம்சங்கள் நிறைந்த பார்ச்சூனர் மாடலின் விலை ரூ.58,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக இன்னோவா க்ரிஸ்டா GX வேரியன்ட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள், பவர்-ஃபோல்டிங் விங் மிரர்கள் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலில் மேம்படுத்தப்பட்ட சீட், எலெக்ட்ரோமேடிக் உள்புற ரியர்-வியூ மிரர் வழங்கப்பட்டுள்ளது.
விலை மாற்றப்பட்டதோடு மட்டுமின்றி, புதிய கார்களுக்கான ஆன்-ரோடு விலை செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் கட்டாயம் ஆனது.
அதன்படி, 1,000 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.5,286 ஆகும். 1,000 முதல் 1,500 சி.சி. வரையிலான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு தொகை ரூ.9,534 என்றும், 1,500 சி.சி.க்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.24,305 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X